உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Thursday, March 24, 2011

ஆடுதுறை செட்டித் தெருவில் தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளின் தொடர்ச்சியாக, 23.03.2011 புதனன்று மாலை 7 மணி அளவில், ஆடுதுறை செட்டித் தெருவில் (தெற்கு சேணிய முஸ்லிம் தெரு) தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

குர்ஆன் - ஹதீஸ் ஒளியில், ரியாத் மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், "இறையச்சம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஆண்கள் - பெண்கள் உட்பட 50 பேர்களுக்கு மேல் இந்த மார்க்க விளக்க அமர்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இது அல்லாமல், பெண்கள் தங்கள் வீடுகளின் வாசல்களில் இருந்து கொண்டு பயானை கேட்டு பயன் பெற்றனர். அருகில் இருந்த தெருக்களுக்கும் ஸ்பீக்கர் வசதி செய்யப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் கிளைச் செயலாளர் சகோ. வரிசை நன்றி உரை ஆற்றினார். கிளைத் தலைவர் சகோ. சாதிக், கிளை பொருளாளர் சகோ. ஜெஹபர் அலி ஆகியோர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Friday, March 11, 2011

ரூபாய் 1910/- மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக ரூபாய் 1910/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம் திருவாடுதுறையைச் சேர்ந்த சிராஜூத்தீன் என்ற சகோதரரின் 13 வயது மகன் குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றார். தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கூடுதல் மருத்துவ செலவுகளுக்காக தனது கிளை மூலம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையை அணுகினார். கடந்த 11.03.2011 அன்று தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்ற ஜூம்ஆ தொழுகைக்கு வந்திருந்தவர்கள் உதவி செய்ததன் அடிப்படையில், ரூ 1910 ஐ சகோ. சிராஜூத்தீன் வசம் கிளைத் தலைவர் சகோ. சாதிக் பாட்ஷா அவர்கள் வழங்கினார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
 

Sunday, February 27, 2011

ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் 2 வது இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் 2 வது இரத்த தான முகாம், ஆடுதுறை ஃபாத்திமா நகர் தவ்ஹீத் மர்கஸ் பள்ளியில், கடந்த 27.02.2011 ஞாயிறன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சகோ. இம்தியாஸ் தலைமை தாங்கினார். ரியாத் மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், "இரத்த தானம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அதனை அடுத்து நடைபெற்ற இரத்த தான முகாமில், பிற மத சகோதரர்கள், பெண்கள் உட்பட சுமார் 75 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்டனர். அவர்களுள் 52 பேர் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதர-சகோதரிகளுக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்", "கொள்கை விளக்கம்", "மாமனிதர் நபிகள் நாயகம்" போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவி மகேஸ்வரி, ஆவணியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நஜீர் முஹம்மது ஆகியோரும் இம்முகாமிற்கு வருகை தந்திருந்தனர்.

ஆவணியாபுரம்-ஆடுதுறை TNTN கிளை நிர்வாகிகளின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில், மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ. கே. காதர் மீரான், மாவட்ட துணைச் செயலாளர் சகோ. எஸ். இப்ராஹீம் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.