உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Showing posts with label தர்பியா. Show all posts
Showing posts with label தர்பியா. Show all posts

Tuesday, May 15, 2012

கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா - 2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 15-05-2012 செவ்வாய்க்கிழமையன்று கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் இம்தியாஸ் மற்றும் மாவட்ட செயலாளர் வரிசை முஹம்மது அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

மாணவர்களை 1 முதல் 5 மற்றும் 6 முதல் 9 மற்றும் 10 முதல் 12 என மூன்று பிரிவுகளாக பிரித்து அந்தந்த பிரிவுகளில் சிறந்து விளங்கிய மூன்று மாணவர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு எனவும் மற்ற அணைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பயிற்சி பெற்ற மாணவர்களின் சொற்பொழிவு நிகழ்சிகளும் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ் !!




பரிசு பெற்றவர்கள்: 
1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள்

முதல் பரிசு - ரஹ்ஷானா ஃபர்வீன்


இரண்டாம் பரிசு - நஸீமா




மூன்றாம் பரிசு - முஹம்மது நஃபில்
 


6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள்

முதல் பரிசு - அஸ்மத் ரஷிதா


இரண்டாம் பரிசு - சஃபா ரமீஸ்



மூன்றாம் பரிசு - ஹமீதா அஷ்ரின்



9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள்
முதல் பரிசு - ஜுமைரா பேகம்

இரண்டாம் பரிசு - ஹாஷிம் ஜாஹித்

மூன்றாம் பரிசு - யாஸ்மின் நிஹார்



மேலும் முகாமில் கலந்து கொண்ட அணித்து மானவர்குக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முழு பட தொகுப்பையும் காண இங்கு கிளிக் செய்யவும்.

Thursday, May 10, 2012

கோடைக்கால பயிற்சி முகாம் - 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக மே 1 முதல் 15 வரை கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.


கிளை மர்கஸில் நடைபெற்று வரும் இம்முகாமில் பள்ளியின் இமாம் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் பயிற்சியளிக்கின்றார். 59 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுவருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


Friday, March 26, 2010

பெண்கள் தர்பியா நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் கடந்த 26.03.10 வெள்ளிக்கிழமை அன்று பெண்களுக்கான தர்பியா நடை பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு ஜனாஸா குளிப்பாட்டும் முறை மற்றும் தொழுகை பயிற்சி அளித்தார்கள்.




Saturday, January 16, 2010

தர்பியா முகாம்

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக தர்பியா முகாம் சென்ற 16-01-2010 சனிக்கிழமை அன்று தவ்ஹீத் மர்கசில் நடைபெற்றது.
கடையநல்லூர் மதரசாவில் இறுதி ஆண்டு படிக்கும் கைசர் அவர்கள்

* தவ்ஹீத்வாதிகளின் பண்புகள் மற்றும்
* நிர்வாகிகளின் பண்புகள்

ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.

மதிய உணவிற்கு பிறகு தொழுகை பயிற்சி, மாவட்ட நிர்வாகிகளான சுவாமிமலை ஜாஃபர் மற்றும் வரிசை முஹம்மது அவர்களால் நடத்தபெற்றது.

இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சியும், அதில் வென்ற மூன்று நபர்களுக்கு சகோதரர் PJ அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு பரிசாக வழங்கப்பெற்றது.


மேலும் படங்கள்: http://picasaweb.google.com/tntjadtavm/TNTJADTAVMTharbia#