உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Saturday, January 30, 2010

29 ஜனவரி, 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக பெண்கள் பயான்  சென்ற 29-01-2010 வெள்ளிக்கிழமை மாலை, ஆவணியாபுரம் ஹாஜியார் நகரிலுள்ள சகோதரர் ஜாகிர் ஹுசைன் இல்லத்தில் நடைபெற்றது.



Saturday, January 16, 2010

தர்பியா முகாம்

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக தர்பியா முகாம் சென்ற 16-01-2010 சனிக்கிழமை அன்று தவ்ஹீத் மர்கசில் நடைபெற்றது.
கடையநல்லூர் மதரசாவில் இறுதி ஆண்டு படிக்கும் கைசர் அவர்கள்

* தவ்ஹீத்வாதிகளின் பண்புகள் மற்றும்
* நிர்வாகிகளின் பண்புகள்

ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.

மதிய உணவிற்கு பிறகு தொழுகை பயிற்சி, மாவட்ட நிர்வாகிகளான சுவாமிமலை ஜாஃபர் மற்றும் வரிசை முஹம்மது அவர்களால் நடத்தபெற்றது.

இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சியும், அதில் வென்ற மூன்று நபர்களுக்கு சகோதரர் PJ அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு பரிசாக வழங்கப்பெற்றது.


மேலும் படங்கள்: http://picasaweb.google.com/tntjadtavm/TNTJADTAVMTharbia#

Friday, January 8, 2010

ரூபாய் 3000/- மருத்துவ உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்  ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக 8/1/2010 அன்று பௌஜீயா கனி ( மேட்டு தெரு) அவர்களுக்கு மருத்துவ உதவியாக  ரூபாய் 3000/- வழங்கப்பட்டது. (பெற்று கொள்வது அவரின் மகன்)

Wednesday, January 6, 2010

ரூபாய் 3000/- வாழ்வாதார உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக 6/1/2010 அன்று உஸ்மான் அலி (ஜப்பான் தெரு) அவர்களுக்கு  தொழில் நலிவு உதவி தொகையாக ரூபாய்  3000/- வழங்கப்பட்டது.