உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Sunday, October 23, 2011

ஜப்பான் தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையின் சார்பாக கடந்த 23 -10 -2011 ஞாயிறு அன்று ஆவணியாபுரம் ஜப்பான் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் அந்நூர் பெண்கள் கல்லூரியில் இருந்து ஆலிமாக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள், உள்ளூரை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.




Tuesday, October 11, 2011

ரூபாய் 2000/- பொருளாதார உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 11-10-2011 அன்று கணவர் விட்டுசென்றதால் பொருளாதார உதவி நாடிய சகோதரி மும்தாஜ் என்பவருக்கு ரூபாய் 2000/- ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது.


ரூபாய் 5000/- மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 11-10-2011 அன்று  கழுத்து பின்புறம் தண்டுவடம் சிகிச்சை செய்வதற்கு மருத்துவ உதவி நாடிய சகோ.பதருல்ஜமான் என்பவருக்கு ரூபாய் 5000/- ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது.