Sunday, February 27, 2011

ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் 2 வது இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் 2 வது இரத்த தான முகாம், ஆடுதுறை ஃபாத்திமா நகர் தவ்ஹீத் மர்கஸ் பள்ளியில், கடந்த 27.02.2011 ஞாயிறன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சகோ. இம்தியாஸ் தலைமை தாங்கினார். ரியாத் மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், "இரத்த தானம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அதனை அடுத்து நடைபெற்ற இரத்த தான முகாமில், பிற மத சகோதரர்கள், பெண்கள் உட்பட சுமார் 75 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்டனர். அவர்களுள் 52 பேர் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதர-சகோதரிகளுக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்", "கொள்கை விளக்கம்", "மாமனிதர் நபிகள் நாயகம்" போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவி மகேஸ்வரி, ஆவணியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நஜீர் முஹம்மது ஆகியோரும் இம்முகாமிற்கு வருகை தந்திருந்தனர்.

ஆவணியாபுரம்-ஆடுதுறை TNTN கிளை நிர்வாகிகளின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில், மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ. கே. காதர் மீரான், மாவட்ட துணைச் செயலாளர் சகோ. எஸ். இப்ராஹீம் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.










0 comments:

Post a Comment