உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

Sunday, November 27, 2011

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் கடந்த 26.11.11 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் வரதச்சனையும் பெண்களின் பங்களிப்பும் என்ற தலைப்பிலும், சகோதரி நஜ்புநிஷா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் பெண்கள் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !...

Monday, November 21, 2011

TNTJ முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 5000/- நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக கிளை நிர்வாகிகள்  ராஜகிரி -பண்டாரவடையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களை  நலம் விசாரித்து நிதி உதவி ரூபாய் 5000/- கிளையின் சார்பாக இல்ல காப்பாளரிடம் வழங்கினர்....

Wednesday, November 9, 2011

கூட்டு குர்பானி - 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை சார்பாக நடத்தப்பட்ட கூட்டு குர்பானி திட்டத்தில் (08-11-2011 செவ்வாய்) மற்றும் (09 -11 -2011 புதன்) ஆகிய நாட்களில் 42 மாடுகள் அறுக்கப்பட்டு 294 பங்குகள் விநியோகம் செய்யப்பட்டது. இதில் 84 பங்குகள் (12 மாடுகள்)  ஏழைகளுக்கு பிரித்து விநியோகம் செய்யப்பட்டது. ...

Monday, November 7, 2011

குர்பானி ஆடுகளின் தோல்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை சார்பாக கடந்த ஹஜ் பெருநாள் அன்று ( 07 -11 -2011 திங்கள்) அன்று கிளை சார்பாக ஒரு ஆடு குர்பானி கொடுக்கப்பட்டது. இதன் தோல் மற்றும் கிளையின் சகோதர்கள் மூலம் அறுக்கப்பட்ட ஆடுகளின் தோல்கள் மொத்தம் 27 பெறப்பட்டு தலா ஒரு தோல் ரூபாய்.200 /-விதம் ரூபாய்.5400 /- விலைக்கு கொடுக்கப்பட்டு தொகை ஜகாத் நிதியில் சேர்க்கபட்டது. ...

ஈகைப் பெருநாள் - 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை சார்பாக கடந்த ஹஜ் பெருநாளை முன்னிட்டு 07 -11 -2011 திங்கள் அன்று ஆவணியாபுரம் தவ்ஹீத் மர்கஸில் (மழையின் காரணமாக) பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் 250 க்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர், மாவட்ட பேச்சாளர் சகோ.சர்புதீன் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்.   ...

Pages 181234 »