உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Friday, January 21, 2011

ரூபாய் 2000/- வாழ்வாதார உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக, சகோ. xxxxxx xxxxxx என்பவருக்கு ஜகாத் நிதியிலிருந்து வாழ்வாதார உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது. கடந்த 21.01.2011 வெள்ளியன்று, கிளைப் பொருளாளர் சகோ. ஜெஹபர் அலி, கிளை சார்பாக வழங்கினார். கிளை நிர்வாகிகள், மாவட்ட துணைச் செயலாளர் சகோ. மன்சூர், ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் ஆகியோர் உடனிருந்தனர்.


Thursday, January 13, 2011

ஆவணியாபுரம் புதுத் தெருவில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக கடந்த 9/1/2011 ஞாயிற்றுக்கிழமையன்று ஆவணியாபுரத்தை சேர்ந்த புதுத் தெருவில் ஜனவரி 27  விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் நுஃமான் அவர்கள் ஜனவரி 27 பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஏன் ? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.





Monday, January 3, 2011

02 ஜனவரி, 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 02.01.11 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடுதுறை மன்சூர் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும், சகோதரி நஸ்ரின் ஆலிமா அவர்கள் தொழுகையின் அவசியமும் தொழாதவரின் நிலையும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.