உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Sunday, February 27, 2011

ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் 2 வது இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் 2 வது இரத்த தான முகாம், ஆடுதுறை ஃபாத்திமா நகர் தவ்ஹீத் மர்கஸ் பள்ளியில், கடந்த 27.02.2011 ஞாயிறன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சகோ. இம்தியாஸ் தலைமை தாங்கினார். ரியாத் மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், "இரத்த தானம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அதனை அடுத்து நடைபெற்ற இரத்த தான முகாமில், பிற மத சகோதரர்கள், பெண்கள் உட்பட சுமார் 75 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்டனர். அவர்களுள் 52 பேர் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதர-சகோதரிகளுக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்", "கொள்கை விளக்கம்", "மாமனிதர் நபிகள் நாயகம்" போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவி மகேஸ்வரி, ஆவணியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நஜீர் முஹம்மது ஆகியோரும் இம்முகாமிற்கு வருகை தந்திருந்தனர்.

ஆவணியாபுரம்-ஆடுதுறை TNTN கிளை நிர்வாகிகளின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில், மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ. கே. காதர் மீரான், மாவட்ட துணைச் செயலாளர் சகோ. எஸ். இப்ராஹீம் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.










Monday, February 14, 2011

மவ்லிதை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையில் மவ்லித் மாதமான(?) ரபியுல் அவ்வல் மாதத்தில் மவ்லித்களையும் மீலாது விழாக்களையும் எதிர்க்கும் முகமாக, விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 13.02.2011 ஞாயிறன்று இரவு மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் “இஸ்லாத்தின் அடிப்படை” என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்.

அதனை அடுத்து, மாவட்ட துணைச் செயலாளர் சகோ. மன்சூர் அலி அவர்கள் “மவ்லிதும் இணைவைப்பும்” என்ற தலைப்பில் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் சிறப்புரை ஆற்றினார்.


அதிக அளவில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர். மேலும், பலர் வீடுகளிலிருந்து பிரச்சாரத்தை கேட்டு பயன் பெற்றனர்.

கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.