நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)
தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2 : 238)
முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)
இணைவைப்பு மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்
நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: நஸயீ
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல் : புகாரீ
இந்த நபி மொழியைக் கவனத்தில் கொண்டு அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம்.
கஅபாவை முன்னோக்குதல்
தொழுபவர் எந்தத் திசையை நோக்கியும் தொழக் கூடாது. மக்கா நகரில் உள்ள கஅபா என்ற ஆலயம் இருக்கும் திசை நோக்கித் தான் தொழ வேண்டும். கஅபா ஆலயம் தமிழத்தின் வடமேற்குத் திசையில் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க பல நவீன சாதனங்களும் உள்ளன.
நிய்யத் (எண்ணம்)
“அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ர) நூல்கள் : புகாரி (1),
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும். நான் இப்போது தொழப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.
தக்பீர் தஹ்ரீமா
தொழுகைக்காக கஅபாவை முன்னோக்கிய பின், முதலில் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். இதற்கு தக்பீர் தஹ்ரீமா (தொழுகைக்கு வெளியே நடைபெறும் காரியங்களைத் தடை செய்வதற்குரிய தக்பீர்) என்று கூறப்படும்.
இரு கைகளை உயர்த்துதல்
அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னர் இரு கைகளையும் தோள் புஜம் வரையில் அல்லது காதின் கீழ்ப் பகுதி வரையிலும் உயர்த்த வேண்டும். அப்போது இரு கைகளையும் மடக்காமல் நீட்டிய வண்ணம் வைத்திருக்க வேண்டும். கைகளால் தோள்களையோ, காதுகளையோ தொடக்கூடாது. அதற்கு நேராகத்தான் இருக்க வேண்டும்.
செய்முறைப்படம்
கைகளை நெஞ்சின் மீது வைத்தல்கைகளை உயர்த்தி வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க வேண்டும். (வலது கையை இடது கையின் மீது வைக்கலாம் அல்லது பிடிப்பதைப் போல் வைத்துக் கொள்ளலாம்.)
இரு கால்களுக்கிடையில் உள்ள இடைவெளிஇரு கால்களையும் மிகவும் விரித்து வைப்பதும் கூடாது. மிகவும் சேர்த்து வைப்பதும் கூடாது. அவரவர் உடல் அமைப்புக்கு தகுந்தவாறு நடுநிலையான முறையில் இரண்டு கால்களையும் வைக்க வேண்டும்.
பார்வை எங்கு இருக்க வேண்டும்?தொழும் போது பார்வை வானத்தை நோக்கி இருக்கக் கூடாது. திரும்பியும் பார்க்கக் கூடாது. முன்னால் உள்ளவர்களைப் பார்த்தால் எந்தக் குற்றமும் கிடையாது.
தொழுகையின் ஆரம்ப துஆகைகளை நெஞ்சில் கட்டிய பின்னர் பின் வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றை ஓத வேண்டும்.
“அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்
ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க தபாரகஸ்முக்க வத.. என்று துவங்கும் ஸனாவை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்மான செய்திகள் இல்லை.
சூரத்துல் பாத்திஹா ஓதுதல்
தொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும்.
“சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : உபாதா (ரலி), நூல்கள் : புகாரீ (756),
இமாமைப் பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா?
ஜமாஅத்தாகத் தொழும் போது இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்துகளில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் மவுனமாக இமாமின் ஓதுதலைக் கேட்க வேண்டும். சப்தமில்லாமல் ஓதும் ரக்அத்களில் பின்பற்றித் தொழுபவரும் ஓத வேண்டும்.
ஆமீன் கூறுதல்
சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் “ஆமீன்” கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின் நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும்.
துணை சூராக்கள்சூரத்துல் பாத்திஹா ஓதிய பின்னர் குர்ஆனில் நமக்குத் தெரிந்த முழு அத்தியாயத்தையோ, அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும்.
முதல் இரண்டு ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹாவும் துணை சூராவும் நபி (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள். பிந்திய ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் துணை சூராவும் சேர்த்து ஓதியுள்ளார்கள்.
ருகூவு செய்தல்நிலையில் சூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி இரு கைகளையும் காதின் கீழ்ப் பகுதி வரை, அல்லது தோள் புஜம் வரை உயர்த்தி ருகூவு செய்ய வேண்டும்.
ருகூவு என்பது குனிந்து இரு கைகளையும் மூட்டின் மீது வைப்பதாகும். அப்போது இரு கைகளும் விலாப்புறத்தில் படாதவாறு நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தலையையும், முதுகையும் சமமாக வைக்க வேண்டும். தலையைத் தாழ்த்தியோ உயர்த்தியோ இருக்கக் கூடாது.
ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி), நூல் : திர்மிதீ (245),
“திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?” என நபித்தோழர்கள் கேட்டனர். “தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: அஹ்மத் (11106)
ருகூவில் ஓதவேண்டியவைபின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக்கூடாது.
சுப்ஹான ரப்பியல் அழீம் (மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) மூன்று தடவை கூற வேண்டும்.
ஸுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)
ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ் (வானவர்களுக்கும், ரூஹ்(ஜிப்ரீலுக்கும்) இறைவன் பரிசுத்தமானவன்; தூய்மையானவன்)
ருகூவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பி அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த துஆக்களை அதிகமாகவே ஓதியுள்ளார்கள்.
ருகூவிலிருந்து எழும் போது
ருகூவிலிருந்து எழும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்) என்று கூறி இரு கைகளையும் தோள்புஜம் அல்லது காது வரை உயர்த்திக் கீழே விட்ட நிலையில் ரப்பனா லக்கல் ஹம்து (எங்கள் இறைவனே! உனக்கே புகழனைத்தும்) என்று கூற வேண்டும். அல்லது ரப்பனா லக்கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபார(க்)கன் ஃபீஹீ என்ற துஆவையும் ஓதலாம். ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா எனும் போது புறங்கைகள் மேல் நோக்கியவாறுதான் உயர்த்த வேண்டும். உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறு உயர்த்துவது கூடாது.
ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டலாமா?சிலர் ருகூவுக்குப் பின்னர் எழுந்தவுடன் மீண்டும் கைகளைக் கட்டிக் கொண்டு பின்னர் ஸஜ்தாச் செய்கின்றனர். இது நபி வழிக்கு மாற்றமானதாகும். கைகளை நேராக தொங்க விடுவதே சரியான முறையாகும்.
தொடரும்…
தொகுப்பு:
மௌலவி அப்துந்நாசிர் எம்.ஐ.எஸ்.சி
நன்றி: http://www.tntj.net/ - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

0 comments:
Post a Comment