தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 15-05-2012 செவ்வாய்க்கிழமையன்று கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் இம்தியாஸ் மற்றும் மாவட்ட செயலாளர் வரிசை முஹம்மது அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
மாணவர்களை 1 முதல் 5 மற்றும் 6 முதல் 9 மற்றும் 10 முதல் 12 என மூன்று பிரிவுகளாக பிரித்து அந்தந்த பிரிவுகளில் சிறந்து விளங்கிய மூன்று மாணவர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு எனவும் மற்ற அணைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பயிற்சி பெற்ற மாணவர்களின் சொற்பொழிவு நிகழ்சிகளும் நடைபெற்றன....