உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

Thursday, March 24, 2011

ஆடுதுறை செட்டித் தெருவில் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளின் தொடர்ச்சியாக, 23.03.2011 புதனன்று மாலை 7 மணி அளவில், ஆடுதுறை செட்டித் தெருவில் (தெற்கு சேணிய முஸ்லிம் தெரு) தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. குர்ஆன் - ஹதீஸ் ஒளியில், ரியாத் மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், "இறையச்சம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஆண்கள் - பெண்கள் உட்பட 50 பேர்களுக்கு மேல் இந்த மார்க்க விளக்க அமர்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இது அல்லாமல், பெண்கள் தங்கள் வீடுகளின் வாசல்களில் இருந்து கொண்டு பயானை கேட்டு பயன் பெற்றனர். அருகில் இருந்த தெருக்களுக்கும் ஸ்பீக்கர் வசதி செய்யப்பட்டு நிகழ்ச்சி...

Friday, March 11, 2011

ரூபாய் 1910/- மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக ரூபாய் 1910/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. நாகை மாவட்டம் திருவாடுதுறையைச் சேர்ந்த சிராஜூத்தீன் என்ற சகோதரரின் 13 வயது மகன் குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றார். தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கூடுதல் மருத்துவ செலவுகளுக்காக தனது கிளை மூலம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையை அணுகினார். கடந்த 11.03.2011 அன்று தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்ற ஜூம்ஆ தொழுகைக்கு வந்திருந்தவர்கள் உதவி செய்ததன் அடிப்படையில், ரூ 1910 ஐ சகோ. சிராஜூத்தீன் வசம் கிளைத் தலைவர் சகோ. சாதிக் பாட்ஷா...

Pages 181234 »