உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Monday, September 14, 2009

ஃபித்ரா விநியோகம் - 2009

தஞ்சை (வடக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை சார்பாக ரூ 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கு மேல் மிகச்சிறப்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

அரிசி, இறைச்சி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் தகுதியுள்ள ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டன.

நோன்புப் பெருநாள் - 2009

நோன்புப் பெருநாளன்று, நபிவழிப்படி திடலில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. கடையநல்லூர் இஸ்லாமியக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் சகோ. முஹம்மது இப்னு பஷீர் அஹமது (MISc) பெருநாள் தொழுகையை நடத்தினார். தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழுகையில் பங்கேற்றனர்.

Thursday, June 4, 2009

ரூபாய் 5000/- மருத்துவ உதவி !



TNTJ ஆடுதுறை - ஆவணியாபுரம் கிளையின் சார்பாக ஆவணியாபுரம் கீழத்தெருவை சேர்ந்த முனாஃப் அவர்களுக்கு ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.