Friday, January 21, 2011

ஜப்பான் காலனியில் ஜனவரி 27 தெருமுனை பிரச்சாரம் !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையில் ஜனவரி 27 பேரணி & ஆர்ப்பாட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 21.01.2011 வெள்ளியன்று இரவு மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ஜப்பான் காலனியில் சிறப்பாக நடைபெற்றது.

ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். "ஜனவரி 27 சென்னை-மதுரை ஆர்பாட்டம் - பேரணி ஏன்?" என்ற தலைப்பில் புள்ளி விபரங்களோடு அவர் விளக்கினார். 

நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் சகோ. மன்சூர் அவர்கள் ஜன27க்கான கிளையின் ஆயத்த பணிகளை விளக்கியபின், கூட்டம் இனிதே துஆவுடன் நிறைவுற்றது.

பெண்கள், காவல்துறை - உளவுத் துறை அன்பர்கள் உட்பட, சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.




0 comments:

Post a Comment